அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இம்மையம் ஆனது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனியார் மற்றும் பொது இடங்களில் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைந்த ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வருகிறது. குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, மனநலம் சார்ந்த பிரச்சினைகள், பாலியல் தொல்லை புகார் மற்றும் பாதுகாப்பு போன்றவைகளுக்கு 181 என்ற பெண்கள் பாதுகாப்பு எண் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ‘நிர்பயா நிதி’ மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் அவசரகால பதில் மற்றும் மீட்பு சேவைகள், மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை, சட்ட உதவி, காவல் துறை உதவி மற்றும் தற்காலிகமான தங்குமிட வசதி போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பெண்கள் உதவி மையம் எண் 181 மூலம் இதுவரை 92 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு பாதுகாப்புடன் தங்கும் வசதி அளிக்கப்பட்டு அவர்களுக்கு வாழ்க்கை முறைக்கான ஆலோசனை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப காவல்துறை உதவி, சட்ட உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் இதுவரை 8 நபர்களுக்கு சட்ட ஆலோசனை, 36 நபர்களுக்கு உளவியல் ஆலோசனை, 14 நபர்களுக்கு காவல்துறை உதவி, 5 நபர்களுக்கு மருத்துவ உதவி, 22 நபர்களுக்கு தங்கும் வசதி என மொத்தம் 85 நபர்களுக்கு ஆலோசனைகளும் உதவிகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..