அரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….

அரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி இன்று ( 21.09.19) காலை 7 மணியளவில் நடைபெற்றது.

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் இந்திய கடலோர காவல்படையின் சார்பாகவும் மற்றும் சீனியப்பா தர்கா கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் பணிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர அறிவியல் துறையின் சார்பாகவும், தூய்மைப் பணி மேற்க்கொண்டனர்.

அரியமான் கடற்கரையில் இந்திய கடலோர காவல்படைத் தலைவர் G.மணிக்குமார் தொடங்கி வைத்தார்.  சீனியப்பா தர்கா கடற்கரை பகுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr.M.கிருஷ்ணன், M.sc,Ph.D, தொடங்கி வைத்தார்.  ஒருங்கிணைப்பாளர் மு.ஆனந்த் அனைவரையும் வரவேற்றார். முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால், மாணவிகள், வெளிநிகழ்வு நிகழ்ச்சி அதிகாரி ஒருங்கிணைப்பாளர் தமிழ் துறைத் தலைவர் Dr.H.பாத்திமா, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை S.விக்னேஸ்வரி கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்க்கொண்டனர்.

கல்லூரி முதல்வர் நெகிழியின் தீமையை எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளும் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..