Home செய்திகள் செப்டம்பர் 3 – உலக கடலோர தினம்

செப்டம்பர் 3 – உலக கடலோர தினம்

by mohan

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 3-வது சனிக்கிழமை, உலக கடலோர தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது, கடற்கரையை அழிவின் பாதையில் இருந்து மீட்டெடுப்பது ஆகியவை இதன் நோக்கம்.தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 1,024 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை உள்ளது. கடற்கரைதான் மீனவர்களின்பாரம்பரியவாழ்வாதாரம்.இந்தியாவில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, தெலங் கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா,குஜராத் ஆகிய மாநிலங் களில் சுமார் 8,400 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை உள்ளது.

ரசாயன கழிவுகள் கடலில் கலப்பு, சாக்கடைகளை கடலில் கலப்பது, கழிவு நீர் மூலம் பிளாஸ்டிக் பைகள் கடலில் கலப்பது ஆகிய பொறுப்பற்ற செல்களால் கடற்கரைகள் குப்பை கிடங்குகளாக மாறி வருகின்றன,இதன் மூலம் கடல் நீர் பெருமளவில் மாசடைந்து வருகிறது. இதனால் மீன் மற்றும் கடல் உயிரினங்களுக்கும், மீன்பிடி தொழிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு, மீனவர்கள் வாழ்வா தாரத்தை இழந்து வருகின்றனர்.தொழிற்சாலைகள், அணுஉலைகள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கட லோரங்களில் தேங்கி, சில நாட்களில் ஆழ்கடலில் கலக்கின்றன. இவை மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துகின்றன.

இவைகளை விட பிளாஸ்டிக் குப்பைகளால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மற்றும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர், ஒரு மைல் சுற்றளவு கடல் பகுதியில் சுமார் 46ஆயிரம் அளவுக்கு பிளாஸ்டிக் துண்டுகள் உள்ளதாக கடல்சார் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இவற்றால் ஆண்டுக்கு 1 மில்லியன் பறவைகள், 1 லட்சத்துக்கும் அதிகமான ஆமைகள், மீன்கள் அழிந்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.வளர்ச்சி என்ற பெயரில் கடலோரத்தை பாதிக்கும் கட்டுமானங்களை தடை செய்வதுடன் கடலில் கழிவுகள் கலப்பதையும் தடை செய்து கடற்கரையை பாதுகாக்க வேண்டும். அரசுகள் இவற்றை கண்டிப்புடன் கையாள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!