சென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

சென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு மண்டலம் சார்பில்மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னை தி.நகர் ஸ்ரீஹால் அரங்கத்தில் நடைபெற்றது.இதில் ஏராளமான பொது நல சங்கங்கள் வாகன ஓட்டுநர் சங்கங்கள் குடியிருப்போர் நலச்சங்கள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்விற்கு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் எழிலரசன் IPS, போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் IPS, மற்றும் ஏராளமான போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.

இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல கோரிக்கைகள் உள்ளடங்கிய மனுக்களை அளித்தனர். இதில் முக்கிய கோரிக்கைகளாக OMR பகுதியில் சமூக ஆர்வலர் சு.இராமச்சந்திரன்  வாகன விபத்துகள் ஏற்படும் காரணிகளை தொகுத்து மனுவாக அளித்தார். வாகன விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image