Home செய்திகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.

by mohan

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் சுமார் 12டன் அளவிலான பிளாஸ்டிக், தெர்மாக்கோல் உள்ளிட்ட கழிவுகளை மாநகராட்சி ஆணையர் தலைமையில் பல்வேறு அமைப்பினர் அகற்றினர்.தூய்மை இந்தியா திட்டம் – தூய்மைமிகு நகரங்கள் கணக்கெடுப்பு 2020 –தேச தந்தை மகாத்மா காந்தியின்150-வது பிறந்த நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் நெகிழியில்லா இந்தியாவை உருவாக்கும்  பொருட்டு செப்.11 முதல் அக்.27 வரை தூய்மை இந்தியா திட்டம் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல் அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு படுதலை தவிர்க்கவும். நம் நாட்டை  தூய்மை மிகு நாடாக முன்னேற்றவும், நீர்நிலைகள் மாசுபடுதலை தவிர்க்கவும், ஏதுவாக திட்டமிட்டு செயல்பட அறிவிக்கப்படதன் பேரில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி  திரேஸ்புரம், வடபுறம் அமைந்துள்ள விவேகானந்தா காலனி,கடற்கரைப் பகுதியில்  கரையோரம் ஒதுங்கிய சுமார் 12டன் அளவிலான பிளாஸ்டிக், தெர்மாக்கோல் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன .

 மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களை ஒருங்கினைத்து கழிவுகளை அகற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கலந்து கொண்டு தூய்மை பணியுடன் மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், காமராஜ் கல்லூரி சுயநிதி பிரிவு தேசிய சமூக திட்டம் மாணவர்கள்,We Can Trust, DGBT, JM Baxi மற்றும் M.S.C Shipping company நிறுவனத்தை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!