Home செய்திகள் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை

by mohan

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஎம் தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணையின் ” status report ” சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் ஆகவே கூடுதல் அவகாசம் தேவை எனவும் அதில் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கில் CPM கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனனின் கோரிக்கையை ஏற்று வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும், இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி,சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூடு வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது , அதில்:-

“இதுவரை 300 பேரிடம் விசாரிக்கப்பட்டு, 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது, அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டப்பட்டதா, ஆயுதங்கள் வைத்திருந்தார்களா? உள்பட பல காரணங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும். எனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கூறியிருந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,துப்பாக்கிச்சூடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து, கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.இவ்வழக்கில் சிபிஎம் சார்பில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன், சுப்பு முத்து ராமலிங்கம், கிஷோர் மற்றும் மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் ஆகியோர் ஆஜராகினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!