
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச பல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ரோட்டரி சங்க தலைவர் முனிய சங்கர் தலைமையில் பட்டய தலைவர் அலாவுதீன் முன்னிலையில் ரோட்டரி உறுப்பினர் டாக்டர் பிரசன்னா டாக்டர் ராகேஷ் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 150 மாணவர்கள் பயன்பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பி.எம் கேஜேந்திரன், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசிக், சுந்தரம், மரியதாஸ், சிவகார்த்திக், பொருளாளர் செல்வ நாராயணன், சிவகார்த்திக் மற்றும் ரோட்டரி சங்க செயலாளர் ஹஸன் நன்றி கூறினார்.