இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக்கூட்டம். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி பங்கேற்பு

ராமநாதபுரம் . மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் முன்னிலை வகித்தார்.இதில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறுகையில்:ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கையாக வார்டு வரையறை மற்றும் வாக்குச்சாவடி வரையறை பணிகள் நடைபெற்றுள்ளன.

இது தொடர்பாக வாக்காளர்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்காக வார்டு வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போதிய உட்கட்டமைப்பு, குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்ப வேண்டும்.தேர்தல் பணிகளுக்காக தற்போது பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள படிவங்கள், வாக்குப்பெட்டிகள் ஆகியவற்றின் நிலை குறித்து முன்னெச்சரிக்கையாக அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். தேர்தல் பணிகளுக்கு தேவையான கூடுதல் வாக்குப் பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அத்தியாவசிய தளவாடப் பொருட்கள் ஆகியவை குறித்தும்ää வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள்ஃபணியாளர்கள் எண்ணிக்கை குறித்தும் கணக்கீடு செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில
தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி,(ஓய்வு) மாவட்ட கருவூல அலுவலகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் முத்திரையிடப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளதேர்தல் தொடர்பான படிவங்கள், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமன் (பரமக்குடி), கோபு (ராமநாதபுரம்), ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) கணேசன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கயல்விழி, மாவட்ட வழங்கல் அலுவலர், கிறிஸ்டோபர் ஆரோக்கியராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா உட்பட அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள்ää வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image