மதுரை கோட்ட ரயில் நிலையங்களில் பாட்டில் நொறுக்கும் கருவி செயல்பாடு துவக்கம்..

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு அங்கமாக பாட்டில் நொறுக்கும் கருவியின் செயல்பாட்டை மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் உயரதிகாரிகள் இன்று (20.9.2019) துவக்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஸ்பிக் நிறுவனம் நிறுவிய பாட்டில் நொறுக்கும் இயந்திர செயல்பாட்டை மதுரை கோட்ட மேலாளர் வி.ஆர். லெனின், துவக்கி வைத்தார். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மூத்த கோட்ட வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, கோவில்பட்டி ரயில் நிலையத்தில்  கோட்ட வர்த்தக மேலாளர்  எம். பரத், மதுரை ரயில் நிலையத்தில் உதவி வர்த்தக மேலாளர் நிறைமதி பிள்ளைக்கனி ஆகியோர் துவக்கிவைத்தனர்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image