அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் பனை விதைகள் நடும் பணி துவக்கம். நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி தொடங்கிவைத்தார்

-திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை ஒன்றியம், சித்தர்கள் நத்தம் ஊராட்சி வைகை ஆற்றுப்படுகையில் உள்ள கரையில் தமிழக அரசு வேளாண்மைத் துறை சார்பாக நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் சார்பாக 6 ஆயிரம் பனை விதைகள்  நடும் பணியை நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் .தேன்மொழி சேகர் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்.. வேளாண்மை உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.இப்பணி நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து சித்தர்கள் நத்தம் அதன் ஊராட்சி பகுதிகளில் வைகை ஆற்று இருபுறங்களில் உள்ள கரையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் 6000 பனை விதைகளை விதைக்கும் பணி நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை   முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் யாகப்பன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன், வேளாண்மை துறை அலுவலர்கள் கீதா, பாலசந்திரன், பாண்டியம்மாள் ,, முன்னாள் ஊராட்சி தலைவர்  முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..