Home செய்திகள் விதிமுறை என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் ரயில்வே நிர்வாகம்

விதிமுறை என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் ரயில்வே நிர்வாகம்

by mohan

மாற்றுத் திறனாளிகளுக்காக ரயில்வே பல சலுகைகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.ஆனால் உண்மை நிலை அதற்கு மாற்றமாக உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர்.ஏழை, நடுத்தர மக்களுக்காக அதிவேக (16 மணி நேரம்) விரைவு ரயில், அந்தியோதயா (நாகர்கோவில் – தாம்பரம்) இந்த ரயிலில், அனைத்து (18) பெட்டிகளும் முன்பதிவு செய்யாதவை. ஒரு பெட்டியில், 100 இருக்கை. (இதுபோக, இருக்கையின் மேல் இருக்கை, தரை பகுதி என, ஒரு பெட்டியில், 250 க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்)

18 பெட்டியில், 1,800 இருக்கை. 4,500க்கும் மேற்பட்டோர் பயணிக்க முடியும். ஆனால், இந்த ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கட்டணத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.தினசரி, இந்த ரயிலில் இருந்து, 15க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், இடைப்பட்ட ரயில் நிலையங்களில், போலீசாரை வைத்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்படும் அவலமும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இறக்கி விடும் இவர்களுக்கு தவழ்ந்து செல்லும், மாற்றுத்திறனாளிகளின் வேதனை தெரிவதில்லை!

1,800 இருக்கையில், ஒரு இருக்கை கூட, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க, மனம் இல்லாத ரயில்வே நிர்வாகம் மாற்றுத்தி றனாளிகளை வஞ்சிக்கும் போக்கை கையாளுகிறது.இது போன்ற விதிமுறைகளை வகுத்துள்ள ரயில்வே நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு, வைத்துள்ள பெயர் (DIVYAANG) தெய்வப்பிறவிகள்.தெய்வப்பிறவி பெயரில் மட்டும் உள்ளது.ஆனால் செயலில் இல்லை.இத்தகைய போக்கை ரயில்வே நிர்வாகம் மாற்றி உண்மையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே அனைத்து மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!