முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்”கற்றதும் பெற்றதும்” விழிப்புணர்வு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்”கற்றதும் பெற்றதும்” என்னும் தலைப்பில் மாணவிகளுக்கு முயற்சி விரிவுரை விழிப்புணர்வு  நிகழ்ச்சி 20.09.19 அன்று  மாலை 02.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த இரண்டாமாண்டு மாணவி N. பாத்திமா ஷிபானா இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி M.ஷீமா அஸ்ரின் வரவேற்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் திரு.K.செந்தில் குமார், அரசு மேல்நிலைப்பள்ளி, அலங்கனூர், அவர்களுக்கு கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு நினைவு பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர், மாணவிகளுக்கு சமூக வலைதளத்தின் நன்மை, தீமை எடுத்துரைத்தார், “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய்” என்றும், “புண்படு பண்படுவாய்” என்றும் கூறி சிறப்புரை ஆற்றினார். இறுதியாக கணினிப் பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி M.மரியம் சகரா நன்றியுரை வழங்க இனிதே இந்நிகழ்வு நிறைவுற்றது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image