மதுரை – அ.இ.அ.தி.மு.க அம்மா பேரவை சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.அமைச்சா் தொடங்கி வைக்கிறாா்

மதுரை திருமங்கலத்தில் அ.இ.அ.தி.மு.க அம்மா பேரவை சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அ.தி.மு.க அம்மா பேரவை சார்பிலும், அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பிலும், நாளை செப் 21ம் தேதி காலை 8 முதல் மாலை 4 மணி வரை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தமிழர் பண்பாடு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 25,000 இரண்டாம் பரிசாக 20, 000 மூன்றாம் பரிசாக 15,000 நான்காம் பரிசாக 10,000 ஐந்தாம் பரிசாக 5,000 வழங்கப்படுகிறது.இதில் 100 சுய குழுக்களை சேர்ந்த 3,000 மேற்பட்ட பெண்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் பரிசுகளை வழங்குகிறார்.

இதற்கான ஏற்பாட்டினை சேரிடபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி செய்து வருகிறார்.அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி காலை எட்டு மணிக்கு கப்பலூர் தொழிற் சங்க அதிபர்கள் மற்றும் அம்மா சேரிட்டி டிரஸ்ட் இணைந்து நடத்தும் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தமிழர் பண்பாடு கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடங்கி வைக்கிறார்.மற்றும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..