சத்தியபாதை-கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக மண்டபம் காந்திநகர் தொடக்கப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள்..

சத்தியபாதை – கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக மண்டபம் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் உள்ள சிறுவர், சிறுமி வகுப்புகளுக்கு டேபிள் மற்றும் சேர்கள் வழங்கப்பட்டது.

சமீபத்தில் தமிழக அரசால் தனியார் பள்ளிக்கு நிகராக சிறுவர், சிறுமியருக்கான LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்கப்பட்டன.  ஆனால் அதற்கான முழு கட்டமைப்பு இல்லாமலே உள்ளது.

மேலும் மண்டபம் காந்திநகர் பள்ளியில் உழைக்கும் நடுத்தர வர்க்க மக்களின் குழந்தைகளை அதிகமாக படித்து வருகின்றனர்.  அக்குழந்தைகளின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு சத்தியபாதை-கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக ₹.25.000/- மதிப்புள்ள படிப்பதற்கு வசதியாக வண்ணமயமான டேபிள், சேர்கள் வழங்கப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..