இளைஞரணியில் அங்கம் வகித்த பலர் தமிழக அமைச்சர்களாக இடம் பிடித்துள்ளனர்… இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் பேச்சு..

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி கிழத்கு இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் மண்டபம் பேரூராட்சி திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மண்டபம் திமுக பேரூர் செயலாளர் டி.ராஜா தலைமை வகித்தார்.  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் முன்னாள் கவுன்சிலர் என்.பூவேந்திரன், இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகி வி.காந்தகுமார், மண்டபம் ஒன்றிய மீனவரணி செயலாளர், முன்னாள் துணை சேர்மன் எம்.நம்பு ராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சந்திரமோகன், மோகன் குமார் முன்னிலை வகித்தனர்.

உறுப்பினர் சேர்ப்பு பணியை மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்து. அவர் பேசுகையில்,  திமுக., இளைஞரணியை மதுரையில் 1980 ஜூலை 20ல் தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இளைஞரணி தொடங்கி தொடர்ச்சியாக 25 ஆண்டுகளில் இலங்கை தமிழர் பிரச்னை, இந்தி மொழி திணிப்பு போராட்டம், மிசா (maintenance of internal security act) உள்பட பல்வேறு போராட்டங்களை பங்கேற்று இளைஞரணி நிர்வாகிகள் பலர் சிறை சென்றுள்ளனர். 1989ல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, இளைஞரணியில் அங்கம் வகித்த கே.என்.நேரு போன்றோர் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றனர். இளைஞரணி நிர்வாகியான சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் , சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் குமார், அண்ணாதுரை ஆகியோர் வென்று எம்பி., ஆகி உள்ளனர். திமுக., இளைஞரணியில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்படுவோருக்கு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரிய அங்கீகாரம் அளித்து கவுரவிப்பார். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட பிரதிநிதி ராமமூர்த்தி,
மண்டபம் ஒன்றிய செயலாளர் செல்ல மரைக்காயர், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி பி.பால்ராஜ்,  தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டபம் பேரூர் செயலாளர் டி.வெள்ளைச்சாமி, முன்னாள் நகர் செயலாளர்கள் ஜான் பாய் (ராமேஸ்வரம்), சுல்தான் (பாம்பன்), மாணவரணி செயலர் திருகோ கிருஷ்ணா, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அரவிந்த், மணிகண்டன், மண்டபம் முகாம் சரவணன், தோணித்துறை ராஜா, மாரிச்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகர் இளைஞரணி அமைப்பாளர் கீதானந்த் நன்றி கூறினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image