காட்பாடி வடுகந்தாங்கல் அருகே வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் கே.வி. அடுத்த வடுகந்தாங்கல் அருகே உள்ள முடினாம்பட்டு கிராமத்தை சேர்ந்த நித்தியானந்தம் என்பவருக்கும் பக்கத்து வீட்டு பிரபுக்கும் தகராறு ஏற்பட்டது. நித்தியானந்தம் அளித்த புகாரை கே.வி.குப்பம் போலீசார் கண்டு கொள்ளவில்லையாம். பிரபுக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு உள்ளனர். இதனால் மனமுடைந்த நித்தியானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தத்தின் உறவினர்கள் 100 -க்கும் மேற்பட்டோர் விரிஞ்சிபுரம் – வடுகந்தாங்கல் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

கே எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image