மரம் வளர்ப்பதை வலியுறுத்தி 400 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் மாற்றுத்திறனாளி

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் ஜான்துரை. மாற்றுத்திறனாளியான இவர் ராதாபுரம் சந்தை தெருவில் தையல்கடை வைத்து நடத்தி வருகிறார்.ன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல்கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். ஆகவே மரம் வளர்ப்பது குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சைக்கிளில் சென்று துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து 19.09.19 இன்று காலை ராதாபுரம் நித்திய கல்யாணி அம்மன் கோவில் முன்பு இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினர்.அவருக்கு சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் நின்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

ராதாபுரத்தில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூர் , தூத்துக்குடி , வழியாக ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.உரிய பொறுப்புகளில் இருந்து கொண்டு கண்துடைப்பிற்காகவும், புகைப்படம் எடுப்பதற்காகவும் மட்டுமே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு செய்வதாக காட்டிக்கொள்பவர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளியாகிய ஜான்துரை செய்யும் இந்த சேவை பாராட்டுக்குறியது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..