உப்பூர் அனல் மின் திட்ட பணியில் கடல் பாலம் அமைக்க எதிர்ப்பு. படகுகளில் கருப்பு கொடி ஏற்றி கடல் முற்றுகை போராட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் தலா 800 மெகாவாட் அனல மின் உற்பத்தி நிலையம் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது .இதற்காக 912 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ. 12,655 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. அனல் மின் நிலையத்தில் இருந்து கடலுக்குள் 7.8 கி.மீ., தூரத்திற்கு மண் நிரப்பி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் திருப்பாலைக்குடி முதல் மோர் பண்ணை வரை 23 மீனவ கிராமங்கள் இப்பாலம் அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பாலம் அமைந்தால் மீன்களின் வரத்து குறைந்து 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், கடல் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப தெரிவித்து , நாட்டுப் படகுகளில் ஆக. 15 ஆம் தேதி கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். அன்றைய தினம் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். சில நாட்கள் கழித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாலப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்ற உறுதியையடுத்து கிராம மக்கள் அமைதி காத்தனர். இந்நிலையில் உப்பூர் அனல் மின் நிலையத்தில் கடல் பாலம் அமைக்கும் பணி தொடங்கியதை கண்டித்து 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் கருப்புக் ஏற்றி பால லம் அமைக்க மணல் நிரப்பி இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாலம் அமைக்கும் பணியை நிறுத்தாவிடில் உயிரை கொடுத்தாகினும் பாலம் அமைவதை நிறுத்துவோம் என மீனவர்கள் கூறினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..