அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் இருப்பதாக 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குற்றச்சாட்டு

மதுரை மின் பகிர்மான வட்டம் சமயநல்லூர் கோட்டம் துவரிமான்(கீழமாத்தூர்) மின்வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் உள்ளது. தினமும் குறைந்தபட்சம் சுமார் ஒரு மணி நேரமாவது மின் வெட்டு அமலில் இருக்கும் . மழை மற்றும் காற்று அடிக்கும் நேரங்களில் சொல்லவே வேண்டாம். குறைந்தது மூன்று மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு அமலில் இருக்கும். இது குறித்து மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் பராமரிப்பு பணி அல்லது பிரேக் டவுன் என பதிலளிப்பார்கள். மாதம் தோறும் நடைபெறும் பராமரிப்பு பணியன்று என்ன செய்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இது குறித்து கோட்டப்பொறியாளரிடம் குறைதீர் கூட்டத்தில் இப்பகுதி மக்கள் புகார் கொடுத்து ஆறு மாதமாகியும் இந்த மின் வெட்டு பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளதாக இப்பகுதியினர் குற்றம்சாட்டினர். மேலும் இந்த பிரச்சினைகள்  சரி செய்து நிரந்தரமாக மின்சாரம் வழங்க மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image