நீதிமன்றத்தில் போலி சான்றிதழ் வழங்கிய வழக்கறிஞர் உள்பட 3 பேர் மீது வழக்கு..

வேலூர் மாவட்டம் விஜயாலயபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்,57. வேலூர் மாவட்டம் சத்தியமங்கலம் காக்காம்பட்டி தெரு ராமலிங்கம்,51. இருவரும், மோசடி வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் உள்ள தங்களது உறவினரை ஜாமீனில் விடுவிக்க, பிணையாளிகளாக வந்தனர்.

அதற்கான சான்றிதழ்களை இராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் -2 நீதிமன்றத்தில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் மூலம் நேற்று மனு சமர்பித்தனர். ஆனால் சமர்ப்பித்த மனு போலியானது என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து  கோவிந்தன், ராமலிங்கம், வழக்கறிஞர் வினோத் ஆகியோர் மீது நீதிமன்ற தலைமை எழுத்தர் வி.நடராஜன் கேணிக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்படி, போலி சான்றிதழ் மூலம் ஜாமீனுக்கு முயற்சித்த 3 பேர் மீது மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் கோவிந்தன், ராமலிங்கத்தை கைது செய்து, ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..