மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே துரத்தியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் பாலமுருகன்,27. கூலித்தொழிலாளியான, இவர் கடந்த 29.2.2016 அன்று பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படித்த 14 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

மாணவி புகாரில், பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார், பாலமுருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று நடந்த இறுதி விசாரணையில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.பகவதியம்மாள், பாலமுருகனுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..