குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு. காஷ்மீர்- கன்னியாகுமரி ரோட்டரி சங்க மோட்டார் சைக்கிள் பயணக் குழுவினருக்கு ராமநாதபுரத்தில் வரவேற்பு

சர்வதேச ரோட்டரி சங்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு குழந்தைகளை காப்போம் என்ற விழிப்புணர்வு மூலம் இந்திய தேசத்தை இணைக்கும் காஷ்மீர்- கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிள் பயணம் ஆக.24 ல் டில்லியில் தொடங்கியது . செப்.12 வரை லூதியானா, ஸ்ரீநகர், கார்கில், சண்டிகர், சாகர், நிஜாமாபாத், ஓசூர், பரமக்குடி , ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட நகரங்கள் வழியாக 6,274 கி.மீ., தூரத்தை கடந்து ராமநாதபுரம் வந்தடைந்த மோட்டார் வாகன பயண குழுவினருக்கு ராமநாதபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா முன்னிலை வகித்தார். கிளப் இயக்குநர் சண்முகராஜேஸ்வரன் வரவேற்றார். ராமநாதபுரம் சரக டிஐஜி ., ரூபேஷ்குமார் மீனா ,மோட்டார் சைக்கிள் பயணத்தை மீண்டும் துவக்கி வைத்தார். ரைடர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தலைவர் ஜோவர், உறுப்பினர் சரவணன், நெல்லை ட்வின் சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வி.அன்பு சுப்ரமணியன், எம்.திலக் ஷோன் நோயல், எஸ்.சுகுமார், என்.ஆர்.மோஸஸ் ஆகியோரை டிஜஜி., ரூபேஷ்குமார் மீனா பாராட்டினார்.ரோட்டரி முன்னாள் கவர்னர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா பேசினார். உதவி கவர்னர் நாகரத்தினம், ரோட்டரி சங்கத் தலைவர் தலைவர் நாகராஜன், செயலர் மார்னிங் ஸ்டார் செந்தில்குமார், பள்ளி முதல்வர்கள் ராஜ முத்து, ஜெயலட்சுமி, கல்வி ஆலோசகர் எழுத்தாளர் சங்கரலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். ரோட்டரி மாவட்ட முன்னாள் செயலர் வழக்கறிஞர் சோமசுந்தரம் நன்றி கூறினார். விழிப்புணர்வு பயண மொத்த தூரம் 6,670 கி.மீ.,ல்எஞ்சிய 396 கி.மீ., தூர பயணத்தை ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து கன்னியாகுமரியில் நிறைவு செய்தனர்.குழந்தை கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை பள்ளி குழந்தைகளிடம் ரோட்டரி சங்கத்தினர் எடுத்துரைத்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..