சென்னை வாலிபர் ரயிலில் தவற விட்ட பணம் உரியவரிடம் ஒப்படைத்த போலீசாரின் நேர்மை

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அலி முல் முக்தார். உடல் நலம் பாதித்த இவரது தாயார் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்க்க சென்னை – ராமேஸ்வரம் (போர்ட் மெயில்) விரைவு ரயில் முன்பதிவு பெட்டி எண் 2 -ல் 67வது இருக்கையில் நேற்று இரவு பயணித்தார். இன்று காலை 7 மணிக்கு ராமநாதபுரத்தில் தனது உடமைகளுடன் இறங்கிய அலிமுல் முக்தார், தாயார் மருத்துவ செலவுக்கு எடுத்து வந்த ரூ.ஒரு லட்சத்துடன் மணி பர்ஸை தவற விட்டதை அறிந்து பதற்றமடைந்தார். இது குறித்து ராமநாதபுரம் நடைமேயில் பணியில் இருந்த ரயில்வே போலீசாரின் தகவல் தெரிவித்தார். பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் , ரயிலில் பணியிலிருந்த போலீசார் அலிப் கான், ஆதிமூலம் ஆகியோரிடம் தகவல் கொடுத்தனர். இதன்படி துரிதமாக செயல்பட்ட போலீசார், அலிமுல் முக்தார் பயணித்த முன் பதிவு பெட்டியில் கிடந்த மணி பர்ஸை கைப்பற்றினர். இதனையடுத்து ராமேஸ்வரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்ட அலிமுல் முக்தாரிடம் ரூ.ஒரு லட்சத்தை பாம்பன் சேட்டு (எ) அலிப் கான், ஆதிமூலம் ஆகியோர் ஒப்படைத்தனர். துரிதமாகவும், நேர்மையாக செயல்பட்ட ரயில்வே போலீசார் அலிப் கான், ஆதிமூலம் ஆகியோரை , காவல் உதவி ஆய்வாளர்கள் தனிக் கொடி, சுரேஷ் உள்ளிட்ட போவீசார் பாராட்டினர். தவற பணத்தை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு அலிமுல் முக்தார் நன்றி தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..