நெல்லையில் நேதாஜி மார்கெட் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணா விரதப்போராட்டம்

நெல்லை நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மார்க்கெட்டில் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், பலசரக்கு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்துவருகின்றனர்.இந்த மார்க்கெட்டை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய மார்க்கெட் கட்டுவதற்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வியாபாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து தங்களுக்கு வேறு இடம் ஒதுக்கித் தரவும், புதிய மார்க்கெட் கட்டிய பிறகு பழைய வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளது.இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இன்று 13.09.19 ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ள வியாபாரிகள் மார்க்கெட்டுக்குள் உள்ளிருப்பு  மற்றும் உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..