மதுரையில் மழை

மதுரை மாவட்டம் காளவாசல் பழங்காநத்தம் அரசரடி பைபாஸ் ரோடு மாடக்குளம் திருப்பரங்குன்றம் திருநகர் பசுமலை பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கியமான அனைத்து பகுதியிலும் மிக கனமழை பெய்தது .சுமார் மூன்று மணிக்கு ஆரம்பித்த மழை தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது .பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி விடும் நேரத்தில் மழை பெய்ததால் மிகவும் மகிழ்ச்சியுடன் மழையில் நனைந்தபடியே நடந்து சென்றனர் .தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று மழைநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு மிக கனமழை பெய்தது மதுரை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று தொடர்ந்து மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் .வருகின்ற நீரை நேரடியாக நீர்நிலைக்கு கொண்டு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு செய்ய வேண்டும் எனவும் மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..