இஸ்ரோ தலைவர் பாராட்டு பெற்ற பள்ளி மாணவிகளின் வீடியோ .

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சந்திரயான் – 2 தொடர்பான வீடியோவுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு மடல் எழுதி வாழ்த்து சொல்லி கடிதம் அனுப்பி உள்ளார்.இக்கடிதம் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.இப்பள்ளி மாணவர்கள் இஸ்ரோ அனுப்பிய சந்திரியான் -2 வெற்றிகரமாக செலுத்த பிரார்த்தனை செய்தும், நம்பிக்கை கடிதம் அனுப்பியும் ,வாழ்த்து தெரிவித்து இருந்த செய்திகள் இணையத்தில் பரவி வைரலானது. இதன் தொடர்ச்சியாக இஸ்ரோ தலைவர் சிவன் பள்ளி தலைமை ஆசிரியர்லெ .சொக்கலிங்கத்துக்கு கையெழுத்திட்டு அனுப்பி உள்ள பாராட்டு மடலில் ,”சந்திரியான் -2 விண்கலம் நிலவின் தரையில் இறங்குவதற்காக உங்கள் பள்ளியில் பிரார்த்தனை கூட்டம் நடத்தியதை அறியும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.மேலும் உங்கள் பள்ளி மாணவிகள் சந்திராயன் – 2 தரையிரங்கும் ஆறு நிலைகளை விரிவாக சொல்லிய வீடியோவை யூ டியூப் யில் பதிவேற்றியதற்கு மிக்க நன்றி.

முடிந்த அளவுக்கு முயற்சிகள் எடுத்தும் சந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் தரையில் வெற்றிகரமாக இறக்க முடியமால் போய்விட்டது.இந்த பின்னடைவால் நாங்கள் மனம் கலங்காமல்,உங்களை போன்ற நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களால் இந்தியா விண்வெளித்துறையில் சாதனை படைக்க தொடர்ந்து உழைப்போம்.உங்கள் கல்வி சேவைக்கும், உங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் “.உங்கள் அன்புடன் என்று இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தமிழில் கையெழுத்திட்டு பள்ளிக்கு கடிதம் அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவரின் பாராட்டு கடித்ததால் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்,நிர்வாகத்தினர் ,பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்திராயன் – 2 தரையிரங்கும் ஆறு நிலைகளை விரிவாக ( https://www.youtube.com/watch?v=JfC73If7l58 ) வீடியோவில் பேசிய ஆறாம் வகுப்பு மாணவி நதியா,ஏழாம் வகுப்பு மாணவி கீர்த்தியா ,இவர்களை ஊக்குவித்த ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இரண்டாவது முறையாக இஸ்ரோ தலைவர் அவர்கள் இப்பள்ளிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…

Be the first to comment

Leave a Reply