திருவண்ணாமலை – நமது செய்தி எதிரொலியால் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!!!

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கம் பகுதில் உள்ள 44 பஞ்சாயத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் நகர பொதுமக்கள் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தில் தங்களுடைய புதிய ஆதார் அட்டை பிரிவதற்கு,ஆதார் அட்டை பெயர் சேர்த்தல், பெயர் சேர்த்தல், புதுப்பித்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதில் மற்றும் பட்டா மாறுதல் இப்படி பல்வேறு தேவைக்காக ஜனங்கள் வந்து செல்லும் வட்டாட்சியர் அலுவலகத்தில் தினந்தோறும் காலை நேரங்களில் சுத்தம் செய்ய வேண்டிய பேரூராட்சி நிர்வாகம், பேரூராட்சியின் அலட்சியத்தால், சுத்தம் செய்யப் படாததால் தேங்கியிருக்கும் குப்பைக் கழிவுகளால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள் மற்றும் இரவு நேரங்களில் குடி மக்கள் பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் வட்டாட்சியர் அலுவலகம் !! இதன் செய்தியை தமது இடி முரசு செய்தி எதிரொலியாக செங்கம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் ஊழியர்களை உத்தரவிட்டு தாலுகா அலுவலகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவுவிட்டனர், இதைத்தொடர்ந்து ஊழியர்கள் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தை முழுவதுமாக சுத்தம் செய்து முடிவில் பிளீச்சிங் பவுடர் விட்டு சென்றனர் .இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர் .இது தொடரவேண்டும் என எதிர்பார்ப்பு!!!

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..