பாம்பன் அருகே நிறம் மாறிய கடல்.. கரை ஒதுங்கிய மீன்இனங்கள்

உலகின் பல்வேறு நாடுகளில் 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்பட்டது. இதன் தாக்கத்தால், இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் பிறகு தமிழக கடலோரப் பகுதிகள் அடிக்கடி உள்வாங்கின. 2013 ஆக.30ல் மண்டபம் பாக் ஜல சந்தி கடலில் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டது. கடல் தண்ணீர் மஞ்சள் நிறம் மாறியதால் , மீனவர்கள் வளர்த்த கடற்பாசிகள் அழுகிய நிலையில் கரை ஒதுங்கின். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தென் கடல் எனப்படும் மன்னார் வளைகுடா குந்து கால் பகுதி கடல் பச்சை நிறமாக மாறியது. பாசிகள் கரை சேர்ந்த நிலையில் ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து செல்ல அனுமதியின்றி காத்திருக்கும் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களில் இருந்து கசியும் ரசாயன கலவையை உணவாக கொண்ட மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து மூத்த விஞ்ஞானி கே.ஈஸ்வரன் : பாம்பன் குந்துகால் கடலில் அதிகளவில் கரை ஒதுங்கிய நுண்ணிய கடற்பாசியை (மைக்ரோ ஆல்கே ) இரையாக உட்கொண்ட மீன்களின் செதில் பகுதியில் சிக்கியிருக்கக் கூடும். அப்போது சுவாசிப்பதில் சிரமடைந்த நிலைகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இந்த மீன்களை சாப்பிடுவதால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படாது. நிறம் மாறிய கடல் தண்ணீர் மாதிரி எடுத்து ஆய்விற்கு உட்படுத்தப்பட உள்ளது என்றார்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..