குற்றங்களை குறைப்பதற்கு CCTV கண்காணிப்பு சாவடி துவக்கம்

மதுரை – தேனி மெயின் ரோடு – சம்மட்டிபுரம் சந்திப்பில் குற்றத்தை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காகவும் வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டும் TVS சுந்தரம் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜன்  முழு ஒத்துழைப்போடு மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், CCTV கண்காணிப்பு சாவடியை துவக்கிவைத்தார்.

தற்போது மூன்று CCTV கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்சியில் சுகுமாரன், காவல் துணை ஆணையர் (போக்குவரத்து பிரிவு),வெற்றி செல்வன், காவல் உதவி ஆணையர், திலகர் திடல் சட்டம் & ஒழுங்கு சரகம், .அருணாசலம், காவல் ஆய்வாளர், C3-S.S.காலனி (சட்டம் & ஒழுங்கு) காவல் நிலையம், மதுரை மாநகர் மற்றும், TVS சுந்தரம் நிறுவனத்தின் தலைவர் .சுந்தர்ராஜன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். CCTV கண்காணிப்பு சாவடியில் கேமரா பதிவுகளை பார்வையிட C3-S.S.காலனி சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 24 மணி நேரமும் இச்சாவடி செயல்படும் எனவும் காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார். மேலும் 25 கேமிராக்கள் விரைவில் பொருத்தப்பட ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..