மதுரையில் பூட்டிய வீட்டில் உயிரிழந்த 2 நாட்களாக அழுகிய நிலையில் உடல் மீட்பு போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரம் சாய்பாபா கோவில் அருகே பத்மநாபன்62  தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். .புரோகித வேலை செய்து வரும்  இவருக்கு திருமணம் ஆகவில்லை .சாய்பாபா கோவில் அருகே தனியாக ஒரு அறை எடுத்து தனியாக வாழ்ந்து வந்திருந்தார். இந்த நிலையில் இரண்டு நாட்களாக உள்புறமாக பூட்டி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் சுப்பிரமணியபுரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த சுப்ரமணியபுரம் காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது அழுகிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..