காரில் மதுபாட்டில் கடத்தியவர்களை கைது செய்து 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்த மதுரை போலீசார்

சோழவந்தான் அருகே குருவித்துறை பகுதியில் மதுரை மாவட்ட SP மணிவண்ணன் கீழ் இயங்கும் தனிப்படை போலீசார் நேற்று 11.09.19 இரவு வாகன சோதனையில் மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அந்த காரில் வந்த குருவித்துறையைச் சேர்ந்த கோபிநாத் (28) என்பவரை சோதனை செய்த போலீசார் அவரிடம் இருந்து  500 மது பாட்டில்கள் மற்றும் கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து காடுபட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்‌. மேற்கண்ட நபர் மீது  வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..