டிரான்ஸ்பாா்மாில் திடீா் தீ விபத்து

மதுரை மாவட்டம் வடக்கு வெளி வீதி உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மின்மாற்றியின் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனை அறிந்த  தீயணைப்புத்துறையினர்  அதிகாரி  வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் இதற்கு உதவியாக தீ எரிவதை பார்த்த சேதுபதி பள்ளி நிர்வாகம் அவர்களிடம் இருந்த தீ தடுப்பு உபகரணங்கள் வைத்து பாதி அளவு தீயை துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி அருகே  நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தீப்பற்றியது பொதுமக்கள் அச்சத்துடன் சென்றனர் .விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் சேதுபதி பள்ளி நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டி சென்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..