ஆரணி அருகே ஆடு திருட முயன்ற நான்கு பேரில் மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து கயிற்றால் கம்பத்தில் கட்டிவைத்து போலிசாரிடம் ஒப்படைப்பு. ஒருவன் தப்பி ஓட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுகசாத்து மடுவங்கரை பகுதியில் விவசாயம் செய்து வருபவர் ரமேஷ். (47). இவர் விவசாய சார்பு தொழிலாக வெள்ளாடு வளர்த்து வருகிறார்.இந்நிலையில் ஆரணி – தேவிகாபுரம் சாலையில் மடுவங்கரை அருகே உள்ள விவசாய நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்துள்ளார். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென ஆட்டினை தூக்கி இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து எடுத்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது இதனைக் கண்ட விவசாயி ரமேஷ் கூச்சலிட்டு வண்டியை வழிமறித்து பிடித்தபோது மூன்று பேர் சிக்கிக் கொண்டனர். ஒருவன் மட்டும் ஆட்டுடன் இரண்டு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டான்.

மூன்று பேரை பிடித்துவைத்து கயிறு மூலம் கம்பத்தில் கட்டிவைத்து கொண்டு போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரனை செய்தனர்.போலிசார் விசாரனை செய்ததில் ஆரணி டவுன் அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், அரி, கமல் மற்றும் வடுகசாத்து காலனி பகுதியைச் சேர்ந்த விக்ரம், ஆகியோர் என முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..