ஆரணி அருகே இரண்டு பள்ளி மாணவர்கள் ஏரியில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்த.பழைய காலனி பகுதியைக் சேர்ந்த அரசுப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் பழநி மகன் மாணவன் கனகராஜ் ( 13. )மற்றும் இராஜேஷ் மகன் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல் ( 11 ) ஆகிய இருவரும் அருகிலுள்ள இரும்பேடு பெரிய ஏரியில் இறங்கி குளிக்கும் போது நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழிந்தனர்.
தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கி இறந்துபோன கனகராஜ், கோகுல், ஆகியோரது பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர்.ஒரே கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்துபோன சம்பைவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…

Be the first to comment

Leave a Reply