ஏரியை தூர்வார கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம்  முழுக்க விவசாய தொழில் சார்ந்த மாவட்டமாகும், வளமான நதிகள் மாவட்டத்தில் இல்லாமல் போனாலும் பரவலாக கிணற்று பாசனம் முலமாகவே, சாகுபடி செய்யப்படுகிறது. அந்த கிணறுகளுக்கு நீராதராத்தை வழங்குவது மாவட்டத்தில் பெரும்பாலன ஏரிகளே ஆகும்.தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் பல்வேறு ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்லையில், திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரகொளத்தூர் மதுரா எல்லையில் உள்ளது ஆலந்தேரி (எ) ஆலந்தாங்கல் ஏரி. 13.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, தற்போது ஏரியை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஏரி மறைந்து குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதேபோல், ஏரிக்கு நீர்வரத்து கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. வெளுக்கனந்தல் மற்றும் சொரகொளத்தூர் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு பாசன வசதி தரும் இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் குடிநீருக்கும், விவசாய தேவைக்கும் மக்கள் அவதிப்படும் நிலை உருவாகும் எனவே, மாவட்ட நிர்வாகம் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம், சொரகொளத்தூர் ஆலந்தேரியை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தூர் வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..