வறுமையிலும் நேர்மை: மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மை மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவர் ஆ.மகாலெட்சுமி .பள்ளிக்கு காலையில் வந்த உடன் பள்ளி வளாகத்தில் கீழே ரூபாய் 100 கிடந்துள்ளது.அதனை பார்த்த மகாலெட்சுமி வகுப்பு ஆசிரியையிடம் கொடுத்துள்ளார்.மிக கஷ்டமான குடும்ப சூழ்நிலையில் ,பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று வரும் நிலையிலும்,பணத்தை பார்த்த உடன் தனக்கு வைத்துக் கொள்ளாமல் நல்ல எண்ணத்துடன்,நேர்மையுடன் பணத்தை எடுத்து கொடுத்த மாணவியை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசு வழங்கினார்.நிகழ்வில் மாணவியின் தகப்பனார்ஆறுமுகதிற்கும்பாராட்டுதெரிவிக்கப்பட்டது.மாணவியின் தந்தை தனது மகளின் செயலை பார்த்து தன்னை அறியாமல் ஆனந்த கண்ணீர் விட்டார்.ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து,வாழ்த்தினார்கள்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

செய்தி வி காளமேகம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..