உசிலம்பட்டியில் கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தாத வட்டாட்சியரை கண்டித்து 58கிராம கால்வாய்விவசாய பாசன சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் தமிழகத்தின் அனைத்து வட்டாச்சியர் அலுவலகத்திலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.கடந்த 3 மாதங்களுக்கு முன் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்ததால் கூட்டம் நடைபெறவில்லை.இந்நிலையில் தேர்தல் முடிந்து கடந்த 3 மாதமாகியும் இதுவரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் விவசாய சம்பந்தமான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கேட்ட போது முறையான பதிலும் இல்லை.இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தாத வட்டாட்சியரை கண்டித்து உசிலம்பட்டி 58கிராம கால்வாய் விவசாய பாசன சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வட்டாச்சியர் அலுவலகத்தில் இல்லாததால் அதிகாரிகள் விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா.;

புனித ரமலான் வாழ்த்துக்கள்..