திருவண்ணாமலை – கிருஷ்ணர் சிலையை சேதப்படுத்திய விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் – இந்து மக்கள் கட்சி அறிவிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில் உள்ள மத்திய ரயில் நிலையம் அருகே உள்ள முத்து விநாயகர் கோவிலில் இருந்த கிருஷ்ணர் சிலையை சேதப்படுத்திய விஷமிகள் மீது காவல்துறையில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்திடம் முறையிட்டனர்.

அதன் பேரில் 8 9 2019 அன்று இரவு கோயிலை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத்  வலியுறுத்தியுள்ளார்.முத்து விநாயகர் கோயிலானது நகர உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகாமையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகவான் கிருஷ்ணர் சிலையை உடைத்த விஷமிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என இந்து மக்கள் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொல்லிமலை சித்தர் பாபா சுவாமிகள், மாவட்ட தலைவர் விஜயராஜ், மாவட்ட துணை தலைவர் குமார் நகர தலைவர் ராஜேஷ், கோயில் நிர்வாகிகள் பாண்டியன், அசோக் குமார் முருகன் மற்றும் ஏராளமான பொதுமக்களும் அர்ஜுன் சம்பத் உடனிருந்தனர்.

பலதரப்பட்ட மக்களும் வணங்கும் முத்து விநாயகர் கோயிலில் இருந்த கிருஷ்ணர் சிலை உடைத்த விஷமிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..