ஆசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற ரயில் டிக்கெட் பரிசோதகருக்கு மதுரை கோட்ட மேலாளர் பாராட்டு

திருநெல்வேலி பெருமாள் புரத்தை சேர்ந்தவர் எமில் ராபின் சிங் .மதுரை ரயில் நிலைய பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றும் இவர், மத்திய பிரதேசம் போபால் இன்டோர் விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடந்த நீச்சல் போட்டி 400 மீட்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் இவர் பெங்களூரில் செப். 24-ம் தேதி நடைபெதும் ஆசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றார். கொல்ல்கத்தாவில் கடந்த மாதம் நடந்த இந்திய ரயில்வே மண்டலங்களுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் பங்கேற்று
4 தங்கப்பதக்கம் வென்றார்.பல்வேறு சாதனை களுடன் ஆசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற இவரை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, மதுரை கோட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டினர்.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…

Be the first to comment

Leave a Reply