வேளாங்கண்ணி மற்றும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்காததால் அவதிக்குள்ளாகும் ரயில் பயணிகள்

கடையநல்லூர் ரயில் நிலையம் வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ், வாரம் 3 முறை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் தினசரி 3 முறை இயக்கப்பட்டு மதுரை, செங்கோட்டை பயணிகள் ரயில்களில் சென்று வருகின்றனர்.ஆனால் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே அறிவித்த 2 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள், கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் புறக்கணித்து செல்கிறது. இதனால் ரயில் பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ரயில் எண் : 06015/16, எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், எர்ணாகுளத்திலிருந்து சனிக்கிழமையும், வேளாங்கண்ணியிருந்துஞாயிற்றுக்கிழமையும் புறப்படுகிறது.கடையநல்லூரில் இருந்து இந்த ரயில் மூலம், ஏராளமானோர் தஞ்சாவூர், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது.

மேலும், ரயில் எண். 06035/36, திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் (சிறப்பு ரயில்) திருநெல்வேலி இருந்து வியாழக்கிழமையும், தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமையும் புறப்படுகிறது. இந்த ரயிலும் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடையநல்லூர் நகராட்சி “தாலுகா” அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால் சிறிய கிராமமான பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் இந்த ரயில்கள் நின்று செல்கிறது.

மேற்கண்ட இரண்டு ரயில்களுக்கும் ரயில் பயணிகள், கடையநல்லூரிலிருந்து பேருந்தில் 15km தூரம் பயணம் செய்து தென்காசி ரயில் நிலையம் சென்று ரயிலில் பயணித்து வரும் அவல நிலை உள்ளது.இதனால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

எனவே, எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் மற்றும் தாம்பரம் – திருநெல்வேலி – தாம்பரம் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களை “கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்த கடையநல்லூர் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம். குமார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையநல்லூர் ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..