அமீரகம் வருகை புரிந்த தமிழக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துபாய் ஈமான் அமைப்பினர் மனு…

துபாய் ஈமான் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துபாய் வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில்  வெளிநாடு வாழ் தமிழ் தொழிலாளர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களின் உடலை தாயம் கொண்டு வருவதற்கான விமான கட்டணம் உள்ளிட்ட செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்,  வெளிநாட்டு வாழ் நலவாரியம் மற்றும்   நல அமைச்சகம் அமைக்கவும்,   வெளிநாட்டில் பணிபுரிந்து தாயகம் திரும்புவோர் தொழில் செய்ய ஏதுவாக தொழில் கடன் உதவி அளித்தல் என  பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது ஈமான் தலைவர் ஹபிபுல்லா,  பொதுச் செயலாளர் ஹமீது யாசீன்,   துணை செயலாளர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..