Home செய்திகள் மண்டபம் வட்டார சுகாதார முகாம் 423 பேருக்கு சிகிச்சை

மண்டபம் வட்டார சுகாதார முகாம் 423 பேருக்கு சிகிச்சை

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டார அளவிலான தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் மண்டபம் பேரூராட்சி மகாலில் இன்று நடந்தது. தமிழக சுகாதாரத் துறை சார்பில் நடந்த முகாமை ராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் தொடங்கி வைத்தார். மண்டபம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் தலைமை வகித்தார். மண்டபம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பாக்யநாதன் வரவேற்றார். டாக்டர் ஜான் (குழந்தை மருத்துவம்), டாக்டர் கிளாரட் (பொது மருத்துவம்), டாக்டர் ராஜசேகர பாண்டியன் (தோல் சிகிச்சை), ஸ்டபனோ (இருதய மருத்துவம்)டாக்டர் பிரஷாந்த் (எலும்பு தேய்மானம், மூட்டு சிகிச்சை),டாக்டர்கள் சினேகா, ஹஸினா, சுகந்தா, சுகா (குழந்தைகள் மற்றும் மகளிர் நலம்) ஆகியோர் சிசிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர். 157 ஆண்கள், 40 ஆண் குழந்தைகள், 185 பெண்கள், 51 பெண் குழந்தைகள் என 423 பேருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, இசிஜி, ஸ்கேன், ரத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளித்து இலவச மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. பெண்களுக்கு மார்பக புற்று நோய், கர்ப்ப வாய் புற்று நோய் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. கண் மருத்துவ உதவியாளர் டேனியல் ஜோசப் கண் பரிசோதனை செய்து பார்வை திறன் குறைந்தோரை உரிய சிகிச்சைக்கு டாக்டரிடம் பரிந்துரைத்தார். உயர் சிகிச்சைக்காக 3 பேர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். தோல், காச நோய் சிகிச்சை, டெங்கு தடுப்பு, ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தன. சித்தா பிரிவு சார்பில் நில வேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கரு.மகேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மெய்.ராமச்சந்திரன் -மண்டபம், கோபிநாத் – தாமரைக்குளம் நகப்புறம், அம்பேத்கர் – தாமரைக்குளம் ஊரகம், கேசவன் – உச்சிப்புளி, நாகேந்திரன் – புதுமடம், தியாகராஜன் – பாம்பன், வைரவ சுந்தரம் – தங்கச்சிமடம் , பாலு – ராமேஸ்வரம் நகர், மருந்தாளுநர் நந்தகோபால் (சித்த மருத்துவம்), வட்டார சுகாதார தலைமை செவிலியர் மாலதி மற்றும் வட்டார செவிலியர்கள் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!