Home செய்திகள் அரியலூரில் வனவியல் விரிவாக்க மையத்திற்கு சுற்றுசுவர் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்திட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

அரியலூரில் வனவியல் விரிவாக்க மையத்திற்கு சுற்றுசுவர் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்திட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

by mohan

வனவியல் விரிவாக்க மையம் அரியலூர் – பெரம்பலூர் சாலையில் சித்தளியில் இயங்கி வருகிறது.காடுகளில் மரம் வளர்ப்பவர்களுக்கு இங்கே மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இந்த வனவியல் காப்பகத்துக்கு உள்ளே மான்கள் அதிகமாக உள்ளன .இந்த வனவியல் காப்பகம் முன்பு நுழைவாயில் இருபுறமும் கம்பி வேலி இருந்து வந்தது. அவைகள் போதிய பராமரிப்பு இல்லாததால் அனைத்தும் மக்கி மண்ணாகி விட்டன . தற்பொழுது நுழைவாயிலுக்கு பாதுகாப்பற்ற முறையில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் மான்கள் உள்ளே இருந்து வெளியே வந்து சாலையில் அடிபட்டு இறப்பதும் வாடிக்கையாக உள்ளது.

மான்களைப் பாதுகாக்கவும் வனவியல் விரிவாக்க மையம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் , உடனடியாக போர்கால நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் அல்லது தரமான கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் இதனால் விபத்துக்கள் பெருமளவில் தடுக்கப்படும்.மேலும் இந்தப் பகுதியை முழுமையாக பாதுகாக்கப்பட்ட மான்களின் சரணாலயமாக ஒரு மாற்றம் செய்யப்பட்டு பெரம்பலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு இந்த சரணாலயத்தில் அழைத்துச் செல்ல வழிவகை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் பாதை அமைப்பின் சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!