புத்துயிர் பெற்ற கண் மருத்துவ பிரிவு

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையானது நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். இம் மருத்துவமனையில், பொது மருத்துவம், குழந்தைகள் நலப் பிரிவு, கண், காது, மூக்கு ,தொண்டை பிரிவு,, சித்தா பிரிவு,உள்ளிட்ட அனைத்து விதமான பிரிவுகள் செயல்படுகின்றன.. தற்பொழுது புதிதாக கண் மருத்துவ பிரிவிற்கு சிறப்பு கண் மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக கண் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்து வந்த நிலைமை முற்றிலும் மாறி தற்பொழுது இம் மருத்துவமனையில் கண் மருத்துவ பகுதியில் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் கண் அறுவை சிகிச்சைப் பிரிவு முதலியன புதுப்பொலிவுடன் செயல்பட துவங்கியுள்ளது. பெரியகுளம் நகர மற்றும் கிராமப்புற ஏழை நோயாளிகளின் துயர் நீக்கும் வகையில் இப் பிரிவு செயல்படுவதாக சமூக ஆர்வலர்களும், மருத்துவ பயனாளிகளும் பாராட்டு தெரிவிக்கின்றனர். இம் மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையை போக்க சிறந்த நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் (மருத்துவம், ஊரகம் மற்றும் குடும்ப நலம்) மரு.சரஸ்வதி, மருத்துவமனை கண்காணிப்பாளர், மரு.குமார், மற்றும் நிலைய மருத்துவர் மரு..ஆசியா ஆகியோர்களுக்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்

சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..