Home செய்திகள் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் குடிமராமத்து, குடிநீர் விநியோக பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் குடிமராமத்து, குடிநீர் விநியோக பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

by mohan

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம், சாலை, தெருவிளக்கு வசதி உள்ளிட்டஅடிப்படை வசதிகள் தொடர்பான திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் அந்தந்த விவசாய பாசனதாரர் நலச்சங்கங்கள் மூலமாகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ஊராட்சி அளவில் உள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊரணிகளில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் ரூ. 21.8 கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் வட்டம் வட்டகுடி கண்மாயில் ரூ.48 லட்சம் மதிப்பிலும்,நாரணமங்கலம் கண்மாயில் ரூ.72 லட்சம் மதிப்பிலும், வெண்ணத்தூர் கண்மாயில் ரூ.99 லட்சம் மதிப்பிலும், சம்பை கண்மாயில் ரூ.39 லட்சம் மதிப்பிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் குடிமராமத்து திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சித் துறை மூலம் புறக்குடி கிராமத்திலுள்ள மெய்க்கண்டான் ஊரணியிலும், தேவிப்பட்டினம் ஊரணியிலும் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சென்று மாணவ, மாணவியருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தில் கீரை வகைகள், காய்கறிகள் போன்ற பயன்தரும் செடிகளை நடவு செய்து சிறிய அளவில் தோட்டமாக பராமரித்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபு, உதவி பொறியாளர் ஆனந்த்பாபுஜி, ஊரக வளர்ச்சி உதவி பொறியாளர் லியோ பிராங்க்ளின்,ராமநாதபுரம் வட்டாட்சியர் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள், பாசனதாரர் நலச்சங்கத்தினர்,கிராம பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!