Home செய்திகள் சிறுவன் உயிர் காத்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கவுரவம்

சிறுவன் உயிர் காத்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கவுரவம்

by mohan

புற்றுநோயால்முதுகு தண்டுவடம் பாதித்த 13 வயது சிறுவனுக்கு புதுச்சேரியில்  சிகிச்சை அளிக்க உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் டிரைவரை ராமநாதபுரம் ஜாஸ் கல்லூரி ஒரு நாள் முதல்வராக்கி கவுரவித்தது. இராமநாதபுரம் அருகே அழகன்குளத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் புற்றுநோய் பாதிப்பால், அவனது முதுகு தண்டுவடம் செயலிழக்கும் நிலைக்கு ஆளானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில், முதுகு தண்டுவடம் மேலும் செயல் இழக்கும் அபாயம் உணர்ந்து 8 மணி நேரத்திற்குள் சிகிச்சையளிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுவனது உறவினர்கள், தமுமுக.,விடம் உதவிக்கரம் கோரினர். இதை தொடர்ந்து நோய் பாதித்த சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்ல முடிவு செய்தனர். புதுச்சேரி துரிதமாக செல்ல தமுமுக.,வினர் இராமநாதபுரம் – புதுச்சேரி இடையே அனைத்து பகுதிகளிலும் உள்ள தமுமுக., முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலை பதிவிட்டனர். இத்தகவல் படி, இராமநாதபுரம் – புதுச்சேரிபோலீசாரை தொடர்பு கொண்டு உதவி கோரினர். ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் வழியாக 366 கி.மீ., தூரத்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 4:30 மணி நேரத்தில் ஆம்புலன்ஸை தமுமுக., ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொண்டி ஜாஸ் ஒட்டிச் சென்று உரிய நேரத்தில் சிறுவன் உயிர் காக்க உதவினார். நிஜ ஹீரோ தொண்டி ஜாஸ் சாமர்த்தியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக ராமநாதபுரம் ஜாஸ் கல்லூரியில் தொண்டி ஜாஸை ஒரு நாள் முதல்வராக்கி, நிறுவனர் முகமது ஷலாவுதீன் கவுரவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!