வாலிபர் தவறி விழுந்து பலி.

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே ஆற்காடு லூதரன் திருச்சபை உள்ளது.இந்தக் கோயிலின் கோபுரத்தின் மேல் உள்ள சிலுவையில் இருந்த மின் விளக்கில் பழுது ஏற்பட்டுள்ளது.இந்த பழுதை நீக்குவதற்கு தனியாரிடம் வேலை பார்க்கும் சுப்பிரமணியின் மகன் அருணாச்சலம் (22) தொழிலாளி வரவழைக்கப்பட்டார்.கோயில் கோபுரத்தில் உள்ள சிலுவையின் மின் விளக்கை சரிசெய்ய மேலே ஏறிய போது எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மேல் இருந்து கீழே தவறி விழுந்தார்.

தவறி விழுந்ததில் மண்டையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இதனால் அந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.பலியானவரின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கோயிலின் கோபுரத்தின் மேல் உள்ள சிலுவையின் மின் விளக்கை சரிசெய்ய ஏறி தொழிலாளி தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

September Issue…

September Issue…