250 கன்டெய்னர் குப்பைகளை திருப்பி அனுப்பியது இந்தோனேசியா..!

பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 250 கன்டெய்னர்களை, அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பியது இந்தோனேசியா.அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஹாங்காங், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து, சரக்கு கப்பல் மூலம் இந்தோனேசியா துறைமுகத்திற்கு சுமார் 250 கன்டெய்னர்கள் வந்தன.

அவைகளில், நச்சுத்தன்மை மிக்க அபாயகரமான பொருட்கள்கள் இருக்கக்கூடும் என்பதால், அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தோனேசியாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான கன்டெய்னர்கள் வந்தன.

‘வேஸ்ட் பேப்பர்’ எனக் குறிப்பிடப்பட்டு வரும் அந்த கன்டெய்னர்களில், நச்சுத்தன்மை மிக்க அபாயகரமான பொருட்கள் இருக்கக்கூடும் என்பதால், அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டன” என்று தெரிவித்தனர்.சமீபத்தில், இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 98 கன்டெய்னர்களில் கழிவு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது குறித்த விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

புனித ரமலான் வாழ்த்துக்கள்..