கதர்கிராப்ட் விற்பனை இந்த ஆண்டு 30கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 35% மானிய விலையில் விற்பனை செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தூத்துக்குடியில் பேட்டி.

தமிழ்நாடு கதர்கிராப்ட் வாரியத்தின் கீழ் இயங்கும் கதர் கிராப்ட் விற்பனை நிலையம் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே உள்ளது இதன் வடிவமைப்பு முற்றிலுமாக புனரமைக்கப்பட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது இதனை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.இந்த தொழில் என்பது சாதாரண சாமானிய  மக்களால் நடத்தப்படும் தொழில் எனவே  இதனை ஊக்குவிக்க வேண்டும் மாவட்டம் முழுவதும் அந்தந்த தலைமை இடங்களில் திறக்கப்பட்டு வருகின்றோம் என்றார் மேலும் கதர் கிராப்ட் விற்பனை வருடத்திற்கு இரண்டு மடங்கு சதவீதம் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர் இந்த ஆண்டு 30கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 35%மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் வெளிநாட்டு பயணம் பற்றி தெரிவித்த அமைச்சர் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த முதல்வர் வெளிநாட்டிற்கு சென்று அன்னிய முதலீட்டை தமிழ் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகமான  முயற்சி செய்து வருகின்றார் அது நிச்சயம் நிறைவேறும்  என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..