சாதித்த தலைமை ஆசிாியருக்கு நல்லாசிாியா் விருது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு தலைமையாசிரியராக பணியாற்றுபவர் தலைமையாசிரியர் மதன்பிரபு. இவர் தன்னுடைய பிள்ளைகளை போல் அனைத்து மாணவ, மாணவிகளையும் பராமரித்த வருகிறார். மாணவர்களின் நலன் கருதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் தலைமையாசிர் மதன்பிரபு.

பொதுவாக குழந்தைகளுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாததையே பார்த்திருப்போம். ஆனால் இந்த பள்ளியில் பயிலும் மாணவ குழந்தைகளிடம் விவசாயத்தை பற்றி கேட்டால்போதும் அதனை பற்றி அத்தனையும் தெளிவாக விளக்குவதுடன் மினிவிவசாயத்தையே செய்துவிடுவார்கள். அந்த அளவிற்கு விவசாயத்தை மாணவர்களிடம் விளக்கி காண்பித்தள்ளார். இந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றும் மதன்பிரபு மாணவர்களை விவசாய நிலங்களுக்கே அழைத்துசென்று நாற்று நடுதல், ஏர்தழுவுதல், நாற்றாங்கல் அமைக்கும் முறை, பயிர்களை பாதுகாக்கும் முறை, தண்ணீர் பாய்ச்சும் முறை போன்றவைகளை மாணவர்களுக்கு பயிற்சியுடன் செய்து காண்பித்துள்ளார். இதனால் மாணவர்கள் விவசாயத்தை பற்றி முழுமையாக தெளிவாக புரிந்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் பள்ளிக்கூடத்தில் காலையில் மாணவர்களின் இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன் வகுப்பறையில் மாணவர்களை தினமும் 5 நிமிடங்கள் வாய்விட்டு சிரிக்க வைத்து மனதில் இருக்கும் கசப்புக்களை போக்கி சந்தேசமான முறைக்கு வருவார்கள். அதற்கு பிறகு மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்தகொள்வர். அதனைதொடர்ந்து தோப்புக்கரனம் போடும் பழக்கத்தை கொண்டுவந்தார். மாணவர்கள் அனைவரும் சுமார் 5 நிமிடங்கள் காதுகளை பிடித்து கொண்டு தோப்புகரனங்கள் போடவைப்பர்.இந்த தோப்புகரனம் போடுவதால் கை,கால் நரம்புகளில் இருக்கும் தசைகள் சுருக்கம இல்லாமல் கை,கால் பகுதிகள் வேகமாக சுழன்று அதன் வேலைகளை செய்யும். இதனால் இந்த தோப்புகரனம் போடுவதாக தலைமையாசிரியர் மதன்பிரபு தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து இடைவேளைக்காக காலையில் 11 மணியளவில் மணி அடிப்பர். அப்போது மாணவர்கள் அனைவரும சுமார் அரைலிட்டர் தண்ணீரையாவது குடிக்கவேண்டும் என கூறி பள்ளியில் நடைமுறைபடுத்தி அந்த செயல்களை செய்து வருகிறார். இந்த செயல்முறை கேராளவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்த பள்ளியில் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறையால் மாணவர்கள் தினமும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கடைபிடித்து தண்ணீர் குடித்து வருகின்றனர். இந்த நடைமுறை பள்ளியில் பயிலும மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மாணவர்கள் எளிதில் பாடங்களை புரிந்துகொள்ளும் விதமாக ஒன்றிய தொடக்க பள்ளிகளிலேயே முதன்முறையாக தொடுதிரை மூலம் ஸ்மார்ட் வகுப்பறையை ஆரம்பித்தனர். இதன் மூலம் மாணவர்கள் யூடூப் மூலம் மாணவர்கள் அவர்களே சென்று அவர்களுக்கு ஏற்ற பாடங்களை தேர்வு செய்து பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் வளர்ச்சிபெறுவதாக தலைமையாசிரியர் மதன்பிரபு கூறியுள்ளார்.

சமீப காலங்களாக திருடர்கள் பள்ளியிலேயே புகுந்து பணிபுரியம் ஆசிரியர்களின் நகைகளை பறித்து செல்லம் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தமிழ்நாட்டிலேயே அரசு உதவிபெறும் தனியார் தொடக்க பள்ளியில் முதன்முறையாக மாணவர்களின் பாகாப்பு குறித்தும், ஆசிரியர்கள் பாதுகாப்பு குறித்தும் பள்ளி வளாகம், வகுப்பறைகள் போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளனர்.மாணவர்களின்மேல் தனி அக்கறைகாட்டி அவர்களின் படிப்புக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபுவை போலவே அனைத்து தலைமையாசிரியரும் இருக்கவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்புகளாகும்.

இந்நிலையில்  தமிழக அரசு இவரின் சேவையை ஊக்கப்படுத்தும் வகையில்   2019 மாநில நல்லாசிரியா் விருது (டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது )வழங்கி கௌரவித்துள்ளது.இதனை ஆசிாியா் தினமான செப் 5 ல் தமிழக முதல்வா்  திருக்கரங்களால் பெற உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..